வல்வை சிதம்பராக் கணிதப்போட்டி அமைப்பினரால் நடத்தப்படும் புத்தாக்கப் போட்டிகள்

எமது தாய் மண்ணில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல தடைகளின் காரணமாக எண்ணற்ற புத்தாக்கங்களை கண்டறிந்து நெருக்கடிகளை வெற்றிகொண்ட வரலாறு எம் தலைமுறைக்குரியது. தற்போதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓர் உலக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கத்தை தொடர்ந்து நிழலாக பல தாக்கங்கள் தொடராலம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அச் சந்தர்பங்களில் ஏற்படும் நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமானது. அத்துடன் எமது சாதாரண நாளாந்த வாழ்விலும் நாம் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம். அதேவேளை சமாந்தரமாக வாண்மைத்துவ தொழில்துறைகளிலும் பல்வேறு புத்தாக்கங்களுக்கான தேவைகள் நாளுக்கு நாள் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

புதியது படைக்கும் ஆற்றலை பரம்பரை ரீதியாகவே எமக்குள் சுமக்கும் எமது தலைமுறையின் திறமைக்கு சவால் விடுக்கும் களம் இது
போட்டியின் விபரம்

தகுதி: All
வயது எல்லை : கருவறை முதல் கல்லறை வரை (வயது எல்லைகள் கிடையாது)
பூகோள எல்லை : வடதுருவம் முதல் தென் துருவம் வரை

இப் போட்டிகள் மூன்று தளங்களில் நடத்தப்படும்.

தளம் 1 – புத்தாக்கம் ஒன்றை மெய்கருவியாக படைத்தல்
புத்தாக்கம் ஒன்றைச் செய்து அதன் செயற்பாட்டுத் திறனை செய்முறையாக காண்பிக்கும் காணொளி ஒன்றை விளக்க குறிப்புக்களுடன் தயாரித்து எனும் இலக்கத்துக்கு வட்சப் செய்ய வேண்டும். எக் காரணம் கொண்டும் இக் காணொளி போட்டி ஏற்பாட்டாளர்களினால் பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என்பதை உறுதிசெய்கின்றோம். தெரிவுசெய்யப்படும் ஆக்கங்களை நேரடியாக எமது நடுவர்கள் தரிசித்து தமது தீர்ப்புக்களை  அறிவிப்பார்கள்.

தளம் 2 – புத்தாக்கம் ஒன்றை மேற்கொள்வதற்கான விஞ்ஞான முன்மொழிவொன்றை சமர்ப்பித்தல்.
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் புத்தாக்க உற்பத்திக்கான தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடிகளின் காரணமாக இத்தகைய முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன. தாம் உருவாக்க நினைக்கும் புத்தாக்கம் தொடர்பான முழுமையான விபரத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அல்லது இருமொழி கலப்பில் ஒரு முன்மொழிவாக தயாரித்து பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தளம் 3 – முன்மொழிவின் அடிப்படையிலான புத்தாக்கத்தை உருவாக்குதல்
தளம் 2 இல் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் தகுதியான சாத்தியமான முன்மொழிவுகள் என எமது நடுவர் குழு தெரிவு செய்யும் முன்மொழிவுகளுக்கு உரித்தான புத்தாக்கங்களை முன்மொழிவுகளை முன்வைத்த படைப்பாளர்களின் அனுமதி மற்றும் ஒத்தாசையுடன் படைக்க வேண்டும்.

பரிசு தொகை 10 இலட்சம்.

முற்பதிவுகளுக்கு – <<<விண்ணப்பம்>>>

 

 

This post has 0 comments

Leave a reply