வல்வையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற சிதம்பர கணித போட்டி விருது விழா
வல்வையில் 15.10.2022(சனிக்கிழமை) மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி(2022) விருது வழங்கும் விழாவில் பரிசில் பெற்றோரில் முதல் மூன்று இடத்தினையும் பின்வரும் மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களை சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ஏனைய விருதுகளை பெற்ற மாணவர்களையும் வாழ்த்துகின்றோம். அத்துடன் கலந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கும், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள, மாணவர்கள் மற்றும்; தொண்டர்களாக செயற்பட்டவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு 1:
ஓவ்வொரு வகுப்பிலும் முதலாம் இடத்தினைப் பெற்றவர்கள் எதிர்வரும் காலத்தில் இலண்டனில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
குறிப்பு 2 :
பின்வரும் பாடசாலைகள் 2023 ஆண்டிற்கான சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சைக்கு பரீட்சை மண்டபமாக செயற்பட விண்ணப்பித்து எம்மிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
1. யா/வலி/ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலயம்
2. யா/வேலாயுதம் மகா வித்தியாலயம் – பருத்தித்துறை
3. அ/கனாதரா காற்றுகெலியவா முஸ்லிம் மகா வித்தியாலயம் – அனுராதபுரம்
4. ம/கிருலியா வித்தியாலயம் – மட்டக்களப்பு
5. யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை
6. தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி – திருகோணமலை
7. தி/ஆர்.கே.எம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி – திருகோணமலை
8. பு/புத்தளம் இந்து மத்திய கல்லூரி
9. வ/நெலுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் – வவுனியா
10. யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை
11. வ/சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி – வவுனியா
12. வ/றம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம் – வவுனியா
13. யா/மானிப்பாய் சோதி வேம்படி வித்தியாலயம்
14. கிளி/பளை மத்திய கல்லூரி
15. மட்/செங்கலடி மத்திய கல்லூரி – மட்டக்களப்பு
16. யா/வயாவிளான் மத்திய கல்லூரி
17. மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி
18. யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை
19. மு/மல்லாவி மத்திய கல்லூரி
20. கொ/இராமநாதன் இந்து மத்திய கல்லூரி – கொழும்பு 21. யாஃயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
22. யா/வலி/அருணோதயா கல்லூரி – அளவெட்டி
23. யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரி – சுன்னாகம்
24. மு/யோகபுரம் மகா வித்தியாலயம் – மல்லாவி
25. தி/புனித மரியாள் கல்லூரி – திருகோணமலை
26. யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி
27. கொ/றோயல் கல்லூரி – கொழும்பு
28. யா/மானிப்பாய் விவேகானந்தா வித்தியாலயம்
29. கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்
30. யா/இடைக்காடு மகா வித்தியாலயம்
31. யா/சிதம்பரக் கல்லுூரி
2023ம் ஆண்டிற்கான பரீட்சை மையமாக செயற்பட விரும்பும் பாடசாலைகளுக்கான பதிவு இறுதித்திகதி 30.10.2022 தினமாகும்.
2023ம் ஆண்டிற்கான சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சை எதிர்வரும் 11.03.2023 சனிக்கிழமை நடைபெறும்
உங்கள் பாடசாலை பரீட்சை மையமாக செயற்பட விரும்பின் கீழ்வரும் இணைப்பினூடாக இணையத்தில் பதிவு செய்து அதன் வன்பிரதியை அதிபர் கையொப்பம், இலச்சினை பொறித்து ஸ்கான் செய்து 30.10.2022 ற்கு முன்னர் எமது மின்னஞ்சலிற்கு அனுப்பி அனுமதியைப் பெற்றுக் கொள்ளவும்.
பதிவுக்கான இணைப்பு:-
chithambaramaths.com/slexam2023/register.php
கடந்த காலங்களில்; பரீட்சை மையமாக செயற்பட்ட பாடசாலைகளும் இம்முறை இணையத்தில் தங்கள் பாடசாலையைப் பரீட்சை நிலையமாகப் பதிவு மேற்கொள்ள வேண்டும்.
நிர்வாகம்
சிதம்பரா கணிதப்போட்டி (இலங்கை)
T.P : 0212261908 (6.30pm – 7.30pm)
0760459984(9.00am – 1.00pm)
Email(Sri Lanka) : chithambaracwn@gmail.com
Website: chithambaramaths.com
Address: No-06, Theeruvil lane, Valettithurai
This post has 0 comments